Friday, 19 August 2016

எதை நோக்கி செல்கின்றோம் ?

எங்க ஊர்ல ...

தெருவெல்லாம்  சின்னது தான் ஆனா பெரிய மனசுக்காரங்க , வீட்டுக்கு முன்னால ரெண்டு பெரிய ஆலமரம் நிக்கும் ,நல்ல காத்தோட்டமான வீடு, பின்னாடி மாட்டு தொழுவம் , சுத்தியும் கோழிங்க குஞ்சுகளோட மேஞ்சுட்டு ராத்திரியானா கொட்டகைக்குள்ள வந்துருங்க, ரெண்டு பக்கமும் கொஞ்ச இடைவெளில பங்காளிங்க வீடு , எதிர்ல மாமா வீட்ல கேக்குற ரேடியோ சத்தம் இதமா எங்க வீட்டு அடுக்களை வரை கேக்கும் , தெரு முக்கு தாத்தா கடைல எப்போ மிட்டாய் எடுத்தாலும் காசு கேட்க மாட்டார் ...அவரு ஏதோ வகைல சொந்தம்னு எங்க பாட்டி சொல்ல கேள்வி.அடுத்த தெருவுல கொஞ்சம் பெருசா ஒரு காலி மைதானம்...சாயங்காலம் ஆச்சுனா போதும்,ஊர்ல இருக்குற பொட்டு பொடுசுங்க எல்லாம் கிட்டி புல் , கிரிக்கெட்டு னு திருவிழா கோலமாகும்.நடந்து போற தூரத்துல தான் எங்க ஊரு குளம்,சிறுசுங்க பெருசுங்கனு எப்போவும் ஒரு கூட்டம் அங்க குளிக்கும். எனக்கு நீச்சல் சொல்லி கொடுத்தவர் எனக்கு பெரிய பரிச்சயம் கிடையாது..தெரிஞ்ச அண்ணன் , ஆனா ரொம்ப பத்திரமா நீச்சல் சொல்லி கொடுத்தார். திருடு , கொள்ளைனு எந்த பிரச்னையும் எனக்கு விவரம் தெரிஞ்சு பார்த்ததில்லை ...காசு பணம் ரொம்ப புழக்கம் கிடையாது, ஆனா சந்தோசமா ஆரோக்கியமா தான் இருந்தோம்..ஆனா பத்தாங்கிளாஸ் முடிச்சுட்டு பெரிய படிப்பு படிக்க வசதி இல்ல எங்க ஊர் பக்கத்துல..வெளியூர் போய்  தான் படிச்சேன் .. எங்க அப்பா நிலத்தை நல்ல விலைக்கு தான் வித்து படிக்க வச்சார்..அந்த மிச்ச காச வச்சு உழைக்காம எங்கப்பனால உக்காந்து சோறு திங்க முடில..மனுஷன் அந்த நினைப்புலயே சீக்கிரம் செத்துட்டாரு...நானும் படிச்சு முடிச்சு பெரிய வேலைக்கு வந்துட்டேன்...இப்போ 10 வருஷம் ஆச்சு...நல்ல சம்பளம் .. ரெண்டு குழந்தைங்க..ஒரு வீடு வாங்கலாம்னு எண்ணம்...

ஊர்ல இருந்து 30km தள்ளி போனா ஒரு Gated  community இருக்கு. உள்ளேயே குழந்தைங்க விளையாட ஒரு சின்ன மைதானம் , நீச்சல் குளம் இருக்கு...வீட்டு பெண்கள் சேர்ந்து பேசி சந்திக்க லேடீஸ் கிளப் இருக்கு.. வீடு முழுக்க ஏசி ... செக்யூரிட்டிக்கு ஒரு 30 பேர் இருக்காங்க .. மளிகை கடைல இருந்து துணி கடை வரைக்கும் வீட்டுக்கு பக்கத்துலயே இருக்கு..

எல்லாம் இருந்தும் கிராமத்துல இருக்குற ஒரு அன்னியோன்யம், அந்த பாசாங்கில்லாத சிரிப்பு, அந்த பேர் தெரியாத தாத்தாவின் கரிசனம், அந்த அடையாளம், அந்த காத்து , அந்த வாசம், அந்த சிரிப்பு, அந்த வாழ்க்கை ?????


கிராமங்களை மீண்டும் எவ்வளவு முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாது என தெரியாமலேயே அழித்து வருகின்றோம் ....

Tuesday, 5 July 2016

நாமே காரணம் !!!

                                                                நாமே காரணம் !!!

அறைக்குள்ள குப்பை போடாத ,
சுவத்துல ஆணி அடிக்காத ,
சொந்தகாரங்க வந்தா வாங்கனு சொல்லு,
பெரியவங்க முன்னாடி கால் மேல கால் போடாத ,
செவ்வாய்க்கிழமை நகம் வெட்டாத  ,
கழிவறை சுத்தமா வச்சுக்கோ ,
மின்சாரத்தை விரயம் பண்ணாத............

வீட்ல ...அதை பண்ணு இதை பண்ணாத , இதை பண்ணு அதை பண்ணாதனு
சொல்லி தர்ற நாம வீட்டுக்கு வெளியே என்ன பண்ணனும், பண்ண கூடாதுனு சொல்லி தர்றதில்ல ..

ஒவ்வொரு கொலை, தற்கொலை, கற்பழிப்புக்கு பின்னும் கதறி அழுவதும், கண்ணீர் விடுவதும், மெழுகுவர்த்தி ஏத்துறதும், அந்த கொலைகாரனை எப்படிலாம் தண்டிக்கணும்னு குரூரமா யோசிக்கறதும் , போலீஸ்காரங்கல திட்டிட்டு ,சட்ட ஒழுங்கு கெட்டு போச்சுனு பேசிட்டு அடுத்த செய்திக்கு காத்துட்டு இருக்கோம். இதுதான் இங்க நடக்குற நிதர்சனம். ஒரு வாட்டியாச்சும் இந்த சம்பவங்களின் பின்புலம் பத்தி யோசிக்க யாரும் தயாரா இல்ல.

120 கோடி மக்கள் இருக்குற நாட்டுல 120 கோடி சிசிடிவி வச்சு எல்லோரையும் பாதுகாக்க முடியாது.சட்டம் ஒழுங்கு, காவல்துறை எல்லாம் நடந்த குற்றங்களுக்கு தண்டனை வழங்க மட்டுமே,குற்றங்கள் நடக்காமல் தடுப்பது நம் அனைவரின் கையில் உள்ளது.இதற்கு தனி மனித ஒழுக்கம் மற்றும் சிந்தனையை மேம்படுத்துவது மட்டுமே வழி. வீட்டிலும் , கல்வி கூடங்களிலும் ஒரு தனி மனிதனின் பொறுப்பு மற்றும் அவனது சிந்தனைகளை சீர் படுத்த வேண்டும்.

தெருவில குப்பை போடாத    ,
சிக்னல் பார்த்து வண்டி ஓட்டு ,
முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு சீட் கொடு ,
நேர்மையா இரு ,லஞ்சம் யாருக்குமே கொடுக்காத,
பொது  இடத்துல புகை பிடிக்காத,
தெரு விளக்கு பகல்ல எரிஞ்சா புகார் கொடு ,
கோயிலோ, ஆலயமோ, சத்தமா பாட்டு வச்சா வாதம் பண்ணு ,
ஜாதியோ, மதமோ அடுத்தவங்ககிட்ட அவசியமில்லாம கேட்கவோ ,சொல்லவோ செய்யாத,
ஒரு விபத்து நடந்தா அங்கிருந்து ஓடாம  உன்னால முடிஞ்ச உதவி செய்  ,
ஒரு அசம்பாவிதம் நடந்தா காவல் துறைக்கு செய்தி கொடு,
அடுத்தவங்க குறையை  சுட்டி காமிச்சு பேசாத ,
ஆணும் பெண்ணும் இரு வேறு பாலினம் மட்டும் தான் ...........

இதெல்லாம் சொல்லி வளர்க்கும் பிள்ளைகளால் மட்டுமே அவர்கள் வாழ்வும் , இந்த நாடும் சீரடையும்.

எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் வன்முறை விடை அல்ல என்பதை ஆழமாக  நம் பிள்ளைகளின்  மனதில் பதிய வைக்க இந்த சமூகமும் சரி , திரைப்படங்களும் சரி , ஏன் , நாமே தவறி விடுகிறோம்.

Sunday, 31 May 2015

பச்சை விடியல்..


 தோழர்களே ,

இன்று மெதுவாக,  இளம் தலைமுறையினரிடம் விவசாயம் கவனம் பெறுகிறது . நாட்டின் முதுகெலும்பை  திரும்பிப் பார்க்க விழைகிறார்கள் எனும் செய்தியே இனிமை தான்.

ஆனால் இவர்களின் பார்வையில் விவசாயம் எப்படி தெரிகிறது என்பதை கொண்டே இந்த மாற்றம் நல்லதா , தீயதா என முடிவெடுக்க முடியும்.

நகர வாழ்க்கை பிடிக்காதவன், பேசாம கிராமத்துல போய் விவசாயம் பண்ணிரலாம் என்று சொல்வதும்,

படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காதவன் , பேசாம மாடு மேய்க்க போயிறலாம் என்று சொல்வதும்,

ஆரோக்யமான வாழ்கை வேணும்னா  கிராமத்துல செட்டில் ஆகுறது தான் ஒரே வழி என்று அவன் கடைசி கால காசியாய்  கிராமங்களை பார்ப்பவனும், உண்மையிலேயே விவசாய வாழ்வியலுக்கு ஒரு நச்சான செயற்கை உரம் தான்.

விவசாயத்தை  ஒரு தொழிலாக மட்டுமே  பார்த்தோமேயானால் ஒரு மிகப்  பெரும்  கொடுஞ்ச்செயலுக்கு அடித்தளமிடவே நாம் ஆயத்தம்  ஆகிறோம்.

இயற்கை விவசாய முறையில் விழைய வைக்கும் பொருளுக்கு விலை அதிகமாம் என்று இயற்கை விவசாயம் செய்ய துடிக்கும் பட்டாளம் இன்று பெருமளவு பரவுவது பெரும் ஆபத்தில் தான் கொண்டு சேர்க்கும்.

உங்கள் பணத்தை முடக்கி லாபம் தேடும் long-term investment எங்கள் விவசாயம் அல்ல.

உங்கள் corporate மூளைகளை சோதிக்கும் testing  environment  எங்கள் விவசாய நிலங்கள்  அல்ல.

பணம் மட்டுமே குறியாய் கொண்டு  தொழிலாளியை ஒரு எந்திரம் போல் நடத்தும் முறையை இங்கு அமல் படுத்த முனையாதீர்கள்.


மண் வளம் , மழை ஆதாரங்கள் , நிலப் பயிர்கள், விலங்குகள், பூச்சிகள் , மலைகள், காடுகள், குளங்கள் , ஆறுகள்  இவை எல்லாம் சார்ந்தது தான் விவசாயம்.
 நம் முன்னோர்களால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்  கணிக்கப்பட்டு, செப்பனிடப்பட்டு , உழைப்பால் நிர்ணயிக்கப்பட்டவைகளே இன்று நாம் பார்க்கும் விவசாய முறைகள். இதன் பெருமை தெரியாமல் மேல் நாட்டு  மோகத்தால் வழி மாறி சென்று விவசாய நிலங்கள் கணினி கற்று  கொடுக்கும் கல்லூரிகளாக மாறிய பிறகும் இன்றும் விவசாயத்தை விடாமல் பற்றி இருக்கும் விவசாயிகளே நாம் வணங்க வேண்டிய தெய்வங்கள். ஏனென்றால் அவர்கள் நமக்காய் உருவாக்கி இருப்பது ஒரு ஏக்கர் விவசாய நிலம் அல்ல, உலகிலேயே மிக அழகான, தீங்கற்ற, மகிழ்ச்சியான வாழக்கை முறையை.இதை உணர்ந்து , இதற்கு ஆசைப்படுபவன் மட்டுமே கலப்பையில் கை வைக்கட்டும்.

விவசாயம் என்பது ஒரு தொழில் மட்டும் அல்ல.அது ஒரு வாழ்கை முறை .

நம்மை தாங்கும் இம்மண்ணை தன்  தாயாக நினைப்பவனும்,

ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களையும் தன்  வாழ்வின் ஒரு பங்காக பாவிப்பவனும்,

தேவைகள்  குறைவாய் இருப்பவனே பணக்காரன், இதை முழுதாய் உணர்ந்தவனும்,

புதுமை புகுப்பின் அதன் எதிர்கால  நன்மை தீமைகளை ஆராய தெரிந்தவனும்,

மேல் நாட்டு உரங்களையும், முறைகளையும் வன்மையாக எதிர்க்கும் போராளியும்  ஒரு படையாய்  தயாராவோம் நண்பர்களே நம் பச்சை விடியலை நோக்கி..

Wednesday, 22 April 2015

The Men

I have been seeing thousands of posts everyday in fb, twitter regarding nirbhaya(india's daughter),rapists,male chauvinism, eve teasing and etc from many of my friends, girls, women from all over India. Its good to see their dedication, support, care, in order to back up their fellow gender. This should be appreciated, kudos my friends and sisters.
I could see much angry and frustration and helplessness when you talk about the other gender (male).I really feel ashamed and bad for my fellow gender. I can’t justify the rape which is happened already, which is unforgivable.
But just remember my dear friends and sisters, No men are born rapists. Their society, media, people around him, his friends are all playing a vital role in order to make a man rapist. These entire medium teach him about women, so you can’t just blame a man for his fault.
Rape, Assault, Eve teasing, all these things are not accidents. This shows the ugly side / mindset of men who has been fed up by our so called traditions and cultures. We have always showcase our women as weak, soft, fragile, sexy, cute, gorgeous, sweet, beauty doll who needs a man to take care.....come on...And the saddest part is even women are projecting themselves as the same.
My humble opinion is before you thrash the other gender and protest only after a cruel rape, you can bring the change slowly. You can't just change the million year mindset in a decade.
Protest when some advertisement company shows you as a fair, beautiful bride and that fairness made you more hopeful and stronger in your life. Only salable things need makeup and need to be attractive. Women are not for sale.
Protest when some movie portraits you as a sex idol or glamorous queen. Of course women are sexy, but you shouldn't allow you to tell this in a big screen where men are seeing you as an item which he can purchase in market.
Be careful, Behave properly, Act as a girl, don't com petite with men in all fields ....you really need to oppose this when any person tell these words.
Don't just protest if some person accuses you for wearing short clothes and lousy makeup. Just realize the inner meaning of it. If you say You need to be sexy or cute, the obvious question will be arise as "for whom?".Don't showcase you for the other gender. You just need to be neat and decent.
Don't use the feminism as advantage in any small issue. Be perfect, be honest, and be straight forward. Because these little issues instigate men to see you different and he starts to hate female.
Be independent. Think and do things for you. As long as you love a man whom your father chooses, you can’t even imagine for a change. Don't let anyone restrict or customize you for their perspective.
It’s better to take a step forward than just crying and complaining.
P: S I am not seeing a girl/woman as Goddess. I am just a person who can see a girl/ women as she is.

எண்ணத் தொகுப்புகள்




Lock down பரிதாபங்கள் :
 தோசை சுடுறான் ,பாத்திரம் கழுவுறான் ,வீடு பெருக்குறான் ,செஸ் ஆடுறான் ,வீடியோ கால் பேசுறான் ,பொண்டாட்டி துணிய தொவைக்குறான் , எல்லாம் ஒரு நாலு நாளு தான் . நாலாவது நாள் வெளி உலகத்தை miss பண்றதா புலம்பி சாகுறான், சண்டை போட்றான் . அப்போ இந்த வீடு எதுக்கு ? இவங்களுக்குனு ஒரு உலகம் வீட்டுக்குள்ள இல்ல னு தான் புரிஞ்சுக்க வேண்டி இருக்கு . ஏதோ ரெண்டு பேரும்  வேலைக்கு போய்டுறதனால காலம் போயிடுது போல . அடிப்படையாவே இந்த நூற்றாண்டுக்கு இந்த கல்யாணம், வீடு system  எல்லாம் கொஞ்சம் திரும்ப யோசிச்சு மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய அவசியம் இருக்கு.
********************************************************************************
Quarantine kavithaigal
***********************


Miss  you  மனிதா !!
காற்று சொல்கிறது -
 ரவுண்டு ரவுண்டா சிகரெட் புகையுமா , சர்ரு புர்ருனு வண்டி புழுதியுமா என்னை எப்போவும் கதகதப்பா வச்சுருப்பியே ! எங்க போயிட்ட மனிதா ? i miss  you  மனிதா !!
ஆறு சொல்கிறது -
  சாயப்பட்டறையின்  வண்ண சாயத்துனாலயும், சோப்பு நுரையினாலும்  என்னை  எப்போதும் சோக்கா வச்சுருப்பியே ! எங்க போயிட்ட மனிதா ? i miss  you  மனிதா !!
பறவை சொல்கிறது  -
  நேரம் காலம் பாக்காம horn  அடிச்சு, எல்லாத்துக்கும் வெடி வெடிச்சு எப்போதும் எங்களை கொண்டாட்டமா
வச்சுருப்பியே ! எங்க போயிட்ட மனிதா ? i miss  you  மனிதா !!
மண் சொல்கிறது -
  என் மேல பூச்சி பொட்டு படாம மருந்தடிச்சு,எனக்குள்ள இருக்கும் மீத்தேன் ஈத்தேன்னு எனக்கே தெரியாத சக்தியெல்லாம்  வெளி கொண்டு வந்தியே ! எங்க போயிட்ட மனிதா ? i miss  you  மனிதா !!
மரம் சொல்கிறது -
  எங்க மழை புயல்னு வந்து சாச்சுடும்னு  நீயே உன் கை வலிக்க எங்களை வெட்டி பேப்பராக்கி   உயிரோட்டமா  வச்சுருப்பியே ! எங்க போயிட்ட மனிதா ? i miss  you  மனிதா !!

********************************************************************************
Arranged Marriage பண்றதும் underwear  வாங்குறதும் ஒன்னு தான் ..Trial  லாம் பாக்க முடியாது ..சரியா இருக்கும் னு நம்ப மட்டும் தான் முடியும் .

********************************************************************************

பொதுவா பேச ஆரம்பிக்கும் போது ladies  firstனு சொல்றது மரியாதை நிமித்தம்லாம் இல்ல ..

அவங்க என்ன moodல இருக்காங்கனு தெரிஞ்சுட்டு நம்ம பேசலாமேன்னு தான் ..

இத புரிஞ்சவன் குடுமபத்த ஓட்டிடுறான் .. :D

********************************************************************************

நல்லவனாய் நடிப்பது தான் கஷ்டம் ..

நல்லவனாய் இருப்பது மிக எளிது ..
********************************************************************************
ஷாப்பிங் மால்ல , சின்ன பையன்  அப்பாட்ட காஸ்டலியான கார் பொம்மை கேட்கும் போது ...பக்கத்துல இருக்குற இன்னொரு  கார் பொம்மைக்கு பண்ணுவான் பாருங்க மார்கெட்டிங்குகு ...அய்யய்யய்யயோ பில்கேட்ஸ்லாம் பிச்சை எடுக்கணும் .

********************************************************************************
எல்லாமே சீக்கிரம் பெற துடிக்கும் நாம் சாவை மட்டும் தள்ளி வைக்கிறோம் .
********************************************************************************

என்றோ ஒரு நாள் மீண்டும் உன்னை என் வாழ்வில் சந்திக்க நேர்ந்தால்  எப்படி நான் இருக்க வேண்டும் என்று தினம் தினம் கண்ணாடி முன் ஒத்திகை பார்த்து கொள்கிறேன்...
********************************************************************************

இந்த வாரம் ஊர் திருவிழா இருக்குடா , வா என்றேன் ... வரவில்லை..

சொந்தகாரங்க கல்யாணம் இருக்குடா  வா என்றேன் ... வரவில்லை..

தாத்தாக்கு உன்னை பார்க்கணும் போல இருக்குதாம்டா ,வா என்றேன் ... வரவில்லை..

அம்மா பிறந்தநாளுக்கு கண்டிப்பாக நீயும் , வா என்றேன் ... வரவில்லை..

மகனே , புதுசா 50 mbps speed Internet  connection வாங்கியிருக்கேன் டா என்றேன் ..


வாரம்  தவறாமல் வர தொடங்கினான் என் அன்பு மகன் ...


********************************************************************************
நீ பதிலளிக்க தொடங்கும் போது தான்  கேள்விகளும் அதிகமாகின்றன...

 உன் வேலையை மட்டும் உருத்தாய் செய்...

காலம் பதில் சொல்லி கொள்ளட்டும் ...
********************************************************************************
மகன்/மகள்  : அப்பா நான் ஒரு பொண்ண / பையனை  காதலிக்குறேன்...

அப்பா : நம்ம ஜாதியா ?


இந்த கேள்வி ஒழியும் போது வந்து கோஷமிடுங்கள்  எங்கள் தலைமுறைக்கு குடும்பம் நடத்த போதிய பொறுப்பில்லையென்று ...
********************************************************************************

சுதந்திரத்திற்கும் , வாய்ப்புகளுக்கும்  சூழலை சுட்டி காட்டாமல் உழைப்பவனே  இங்கு உயர்கிறான்.
********************************************************************************
அடித்து விளையாட கூடாது என்பதையே அடித்து தான் சொல்லி கொடுக்கின்றோம்  குழந்தைகளிடம்...

********************************************************************************
அப்போ :

விழியில் விழுந்து ,இதயம் நுழைந்து , உயிரில் கலந்த உறவே ....

இப்போ..

missed call  கொடுங்க ...கல்யாணம் முடிங்க...
                                                              - Bharat  matrimony

என்ன கொடுமை சார் இது  :P


********************************************************************************

2050 ல எப்பிடியும் இந்தியா பணக்கார நாடா மாறிடும்....

விக்கிற விலைவாசிக்கு சாப்பிட முடியாம  பசியிலையோ...

புதுசு புதுசா வர்ற நோய்க்கு தனியார் ஆஸ்பத்திரில பில் கட்ட முடியாமையோ எல்லா ஏழையும் சீக்கிரம் செத்துருவான்..



அப்புறம் இந்தியால பணக்காரன் மட்டும்தானய்யா வாழப் போறான்...இந்தியா பணக்கார நாடா ஆயிடும்..


கவலைபடாதீங்க ...

********************************************************************************

பசங்களுக்கு எப்போவுமே உயிர கொடுக்குற பொண்ண விட உயிர  எடுக்குற பொண்ணத்  தான் புடிச்சு தொலையுது...என்ன கருமமோ !!!
********************************************************************************
இன்றைய இளைஞர்கள் அதிகாலை எழுகிறார்களோ  இல்லையோ அலாரம் மட்டும் மட்டும் தினசரி வைக்கிறார்கள் ...
********************************************************************************
கலர் tv , grinder , மிக்ஸி , laptop .....இதெல்லாம் கொடுத்த அரசாங்கம் இதுக்கு பதிலா  ஒரு கறவை மாடு கொடுத்திருக்கலாம்....உங்க பால் விலை உயர்வுல  இருந்து தப்பிச்சு நிம்மதியா ஒரு டீயாவது   குடிக்கலாம்.

********************************************************************************
நீ காதலிக்கும் நபரை விட உன்னை காதலிக்கும் நபரை  திருமணம் செய்து கொள் என்று சொல்லுவதில்

 ஒரு ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ இருக்கத் தான் செய்கிறது.

********************************************************************************

கனவு காண்பதோ ;

கனவை அடைய முயற்சித்து தோற்பதோ தப்பில்லை ;

அடுத்தவனின் கனவை விமர்சனம் மட்டுமே செய்வது தான் பரிதாபம் ..


********************************************************************************

Sad fact:
If half of the people who bunked the college and offices on the semi final world cup, came out to road on the strike day (karnataka dam issue) we would have think about a change in our BHAARAT..


********************************************************************************
இது தான் நான் என்று முடிவு எடுக்காதீர்கள் .. இதுவும் நான் தான் என்று குழம்பி கொண்டே இருங்கள் ...


*******************************************************************************
தலை சீவுறதுக்கு கண்ணாடி முன்னாடி நின்னா தப்பில்ல ... அதை கலைச்சு விடுறதுக்கு ஏன்டா இவ்ளோ நேரம் நிக்குறீங்க ....

*******************************************************************************

தொலைக்காட்சியில் சிறப்பு பொங்கல் நிகழ்ச்சிக்கும் ,
காதல் பாடல்களில் பசுமை வயல் காட்டுவதற்கும் ,
ஏழைச் சிறுவனை புகைப்படம் எடுப்பதற்கும் ,
தமிழ் கலாச்சார பெருமை பேசும் நேரத்திற்கும் மட்டுமே
இங்கே கிராமங்கள் கவனிக்கப்படுகின்றன ....
மற்றபடி ஏனோ இந்த கிராமம் எனும் முதுகெலும்பை திரும்பி பார்க்க
யாராலும் இயலவில்லை போலும் பாவம் ..

*******************************************************************************
கொடுத்த வாக்குறுதிகள் தேர்தல் மை போல காற்றில் கறையுமென தெரியாமல் கழிந்தது என் முதல் வாக்களிப்பு...
வாக்களித்தேன் ...என் ஈழம் இழந்தேன் ...
இதோ என் இரண்டாம் தேர்தல் ..
இழக்க இன்னும் பெரிதாக இல்லை என அச்சமின்றி வாக்களிக்கின்றேன் புரையோடிய ஈழ வடுவுடன்.
-- மீதமுள்ள தமிழன்.

*******************************************************************************

Losing a cricket match is not a nation's shame;A farmer suicide is .

*******************************************************************************

இன்றைய தலைமுறை எழுதுவதற்கு தவறுவதில்லை ....படிக்கத் தவறினாலும் கூட ...
#வருத்தம்

*******************************************************************************
உலகம் உள்ளங்கையில் என்னும் ஆசையில் தான் smartphone வாங்கினேன் ... பிறகு தான் தெரிந்தது உலகம் சுருங்கவில்லை , நான் தான் என் உலகத்தை உள்ளங்கை அளவில் சுருக்கி கொண்டேன் என்று...

நண்பனின் பிறந்தநாளை facebook இல்  தேடும் பொழுது தான் உணர்ந்தேன்  இணையத்தில் உள்ள இணைப்பு இதயத்தில் இல்லாததை ...

 தொலைவில் இருப்பவனிடம் அதிகமாய் பேச போகிறேன் என நினைத்து  அருகில் இருப்பவனை  தொலைத்தே விட்டேன் ...

இரண்டு  sim card  போட்ட என்னால் இரண்டு  நிமிடம் கூட தாய் தந்தையினருடன் முழு மனதாய் பேச நேரமின்றி போனேன் ...

குழந்தையின் மழலை சிரிப்பும், குயிலின் கானக் குரலும்  கேட்டு விடாதபடி இருக்கமாய் earphones அணிய பழகிக் கொண்டேன் ...


வீட்டின் ஜன்னலோரம் படுத்து உலகை ரசிக்காமல் plugpoint  அருகில் படுத்து மீதமிருக்கும் இரவையும் பொழுதாய் போக்கினேன் ...

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமாம் ... நான் புதிதாய் கற்று கொண்டேன் LOL ,ROFL என்று சத்தமின்றி சிரித்து கொள்ள ...


இறுதியில் எனக்கே நான் மூன்றாம் மனிதனாய் போனேன் ..

*******************************************************************************
கவிதைகளையும் கண்ணாமூச்சி ஆட வைக்கும் உன் புரியா விழி மொழி அழகுகள்...
*******************************************************************************

வகுப்புக்கு லேட்டா வர்றவன் தியேட்டர்க்கு சீக்கிரமா வர்றதும்  ;

வகுப்புக்கு சீக்கிரம் வர்றவன் தியேட்டர்க்கு லேட்டா  வர்றதும்

ஒரு நிதர்சனமான உண்மை தான் :)


*******************************************************************************

காதல் சலனம் தான் ...இருந்தும் ரசிக்கிறேன்   ...அரவமற்ற  காட்டுக்குள் சருகு மிதித்தது போல  ...

*******************************************************************************

முதல் காதல்  ,முதல் மழைத் துளி ...இரண்டும் ,  நாம் விரும்பாவிடினும் நம்மை நனைத்து விடத்தான் செய்கிறது   :)

*******************************************************************************

காயமற்றவன் காதலில் 'விழுந்திருக்கவே' முடியாது :)


*******************************************************************************

கண்ணீரும் சிரிப்பும் சந்திக்கும்  முரண்பாட்டுக் கிரகணம் -காதல் :)


*******************************************************************************

இன்றும் சொல்லாமலே பிரிந்தான் காதலை ...
 நிழலுக்கு பூச்சூடியவனாய் ...

*******************************************************************************

நல்ல நட்பை தேடுவது கூழாங்கல்லினுள் வைரம் தேடுவது போல..ஆனால் கிடைத்துவிட்டால் நம்  மதிப்புயரும் :)

*******************************************************************************

காதலனாய் கொடுத்த அனைத்தையும் வைத்து கொண்டு காதலை மட்டும் வேண்டாம் என்றாள் ...

*******************************************************************************
சில சமயங்களில் மௌனமே அதிகம் புரிய வைக்கிறது  ...

*******************************************************************************

கானல் நீரும் தாகம் தீர்த்தது காதல் உணர்ந்த பின்னால்   :)

*******************************************************************************

திரும்ப கொடுத்தாய் என் இதயத்தை சிற்சில காயங்களுடன் ...பரவாயில்லை பெண்ணே ...நம் நினைவுகள் மருந்தாகட்டும் !!!


*******************************************************************************

 அவள் என்னை ஏதோ கேட்டாள் ....அறிவுக்கு தெரிந்திருந்தும்  மனம் தெரியாது என்றே தலையாட்ட சொன்னது ...அவள்  விவரிக்கும் அழகை ரசிப்பதற்காகவே :)


*******************************************************************************

காதலில் உடைந்தேன் ...
கண்ணீர் கடந்தேன் ...
மரணம் வென்றேன்...
மனம் கொன்றேன்  ...
யுகம் முடிந்தும் இதயச்சகம் திரும்ப கிடைக்க பெறாதவனாய் ....
வாழ்கிறேன் ...??


*******************************************************************************

என்னை எனக்கே பிடித்தது அவளால் !!!!

*******************************************************************************
காதல் கடிதம் :
                இருதய  சறுக்கல்களின் கிறுக்கல்கள்  !!!


*******************************************************************************
இன்று காலையும் அவள் முகம் தான் கனவில் ...ஆனால் கலைந்து போனது ...இந்த சில நிமிட காதல்களால் சிலிர்த்து தான் போகிறேன் தினமும் !!!!!

*******************************************************************************
தயக்கங்கள் தொடர்கதை  ஆயினும் சலிக்கவில்லை பெண்ணே !! காத்திருக்கிறேன் முடிவுக்காக !!!

*******************************************************************************
தமிழ் என்னும் கடலின் கடைசி துளியையும் ருசித்து விட்டேன் ...இன்னும் மிச்சமுள்ளது உன் எழுதப்படாத அழகு !!!

*******************************************************************************


Saturday, 21 March 2015

முடிஞ்சா.....

                                          

முடிஞ்சா வருஷத்துக்கு ரெண்டு மரம் நடு , 

முடிஞ்சா வயசானவங்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு  பஸ்ல இடம் கொடு ,


முடிஞ்சா தண்ணீரை விரயம் பண்ணாம செலவழி ,


முடிஞ்சா பக்கத்துல இருக்குற இடங்களுக்கு வண்டில போகாம நடந்து பழகு ,


முடிஞ்சா ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மொபைல் பார்க்காம வேலை செய் ,


முடிஞ்சா உன்னோட சொந்த வேலையை நீயே செய்ய பாரு ,


முடிஞ்சா அப்பா அம்மா கூட 2 மாசத்துல ஒரு நாள் முழுசா செலவழி,


முடிஞ்சா உன் இடத்த  சுத்தமா வச்சுக்க முயற்சி பண்ணு ,


முடிஞ்சா ஒரு ஏழை பையனுக்கு மாசத்துல  ஒரு வேளை நல்ல சாப்பாடு வாங்கி கொடு ,


முடிஞ்சா சிறு வியாபாரிகளிடம்  பேரம் பேசாம பொருட்கள் வாங்கு  ,


முடிஞ்சா தேவைக்கு அதிகமான துணிகளோ , காலணிகளோ வாங்காம இரு ,


முடிஞ்சா தமிழ் தெரிஞ்சவன் கிட்ட தமிழ்ல பேசி பழகு ,


முடிஞ்சா லஞ்சம் கொடுக்காம, பொய் சொல்லாம நேர்மையா இரு ,


முடிஞ்சா அடுத்தவன் செய்ற புது முயற்சிகளை பாராட்டு ,


முடிஞ்சா சின்ன சின்ன விஷயத்துக்கு கோபப்படாம, குறை சொல்லாம  இரு ,


முடிஞ்சா பொது இடங்களில் அடுத்தவன தொந்தரவு பண்ணாம இரு ,



முடிஞ்சா மேல சொன்னதுல ஏதாச்சும் ஒரு விஷயத்த எப்போதும் செஞ்சு பாரு :)




Friday, 8 June 2012

Does our life has a start ???

When i was about to join the school after i spent my first three years with my mom and dad, my dad told me "Son, the real life in outside world has started now , so be careful" !!!
When i completed my schools my brother told "Brother, now only your real life has started , so be careful" !!!
When i completed my graduation my teachers and my friends told " Dude,Your life has started now, so be careful and take every steps carefully " !!!

My question is ..Does really life starts at some point of time ?? if yes, When exactly life s getting started ?

Because my answer to this question is "Life never get starts and ends" . Life just happens. And if some people blindly say as life is starting at birth and ending at death , i will deny that even . Because if death has the ability to end a life then there is no meaning in we are enjoying the music of michael jackson and writings by kalki and speeches by vivekanandar even after they are not among us physically . So until their contributions and creations disappears, their life has no end.

At every single point of time we are facing the life's challenge with our own ability. When i was a kid i have been given food , home, money to spend from my parents . That doesn't mean that i was sheltered by my parents and my own life hasn't started at that time . Even as a kid i had to face all the people around me after my parent left me in that bigger school buildings . I had to get friends who could be always with me at that time . I had to study those big big numbers without even knowing what is that . I had to respect my elders when i didn't even know why i am doing that. I had to have goals like getting chocolates from my teacher by doing something smart among all in classrooms. 

When i graduated from my school and entering college i had to do things to match me with that damn big groups of people . I had to face situations where i need to sacrifice my dreams for my friends . I had to cross all the people around me who were  selfish , jealousy , lovable. I had to know to select peoples who really cared for me. I had to cry for people who i really cared for. Disappoinment , love , care ,true , lie , cruel , selfish ..... i crossed everything and not once !! every time , when i had moved with different peoples... There is no start or end to our life. We have been always sorrounded by all these things which i mentioned above.

So if anyone telling you that your life has started, dont get frightened. Bcoz life never has a start or end. Just live everyday. Just keep the good memories with you always , never care for the bad memories . Dont feel sad for anything as u lost something or as it reached the end which u might thought it ll never has an end. If u believe in god,just  pray god not for happiness , pray for everything. Life has many pages , dont just stay in a single page and get satisfied. Or atleast be ready to face the other exciting, shocking, unbelievable, unexpected pages of life. If you blindly follow a successful person's path then you may miss your own wonderful , beautiful  path which life might lead you. Just keep the hand of LIFE :) !! It will lead you to somewhere where you have to go . Enjoy it without expectations :)