எங்க ஊர்ல ...
தெருவெல்லாம் சின்னது தான் ஆனா பெரிய மனசுக்காரங்க , வீட்டுக்கு முன்னால ரெண்டு பெரிய ஆலமரம் நிக்கும் ,நல்ல காத்தோட்டமான வீடு, பின்னாடி மாட்டு தொழுவம் , சுத்தியும் கோழிங்க குஞ்சுகளோட மேஞ்சுட்டு ராத்திரியானா கொட்டகைக்குள்ள வந்துருங்க, ரெண்டு பக்கமும் கொஞ்ச இடைவெளில பங்காளிங்க வீடு , எதிர்ல மாமா வீட்ல கேக்குற ரேடியோ சத்தம் இதமா எங்க வீட்டு அடுக்களை வரை கேக்கும் , தெரு முக்கு தாத்தா கடைல எப்போ மிட்டாய் எடுத்தாலும் காசு கேட்க மாட்டார் ...அவரு ஏதோ வகைல சொந்தம்னு எங்க பாட்டி சொல்ல கேள்வி.அடுத்த தெருவுல கொஞ்சம் பெருசா ஒரு காலி மைதானம்...சாயங்காலம் ஆச்சுனா போதும்,ஊர்ல இருக்குற பொட்டு பொடுசுங்க எல்லாம் கிட்டி புல் , கிரிக்கெட்டு னு திருவிழா கோலமாகும்.நடந்து போற தூரத்துல தான் எங்க ஊரு குளம்,சிறுசுங்க பெருசுங்கனு எப்போவும் ஒரு கூட்டம் அங்க குளிக்கும். எனக்கு நீச்சல் சொல்லி கொடுத்தவர் எனக்கு பெரிய பரிச்சயம் கிடையாது..தெரிஞ்ச அண்ணன் , ஆனா ரொம்ப பத்திரமா நீச்சல் சொல்லி கொடுத்தார். திருடு , கொள்ளைனு எந்த பிரச்னையும் எனக்கு விவரம் தெரிஞ்சு பார்த்ததில்லை ...காசு பணம் ரொம்ப புழக்கம் கிடையாது, ஆனா சந்தோசமா ஆரோக்கியமா தான் இருந்தோம்..ஆனா பத்தாங்கிளாஸ் முடிச்சுட்டு பெரிய படிப்பு படிக்க வசதி இல்ல எங்க ஊர் பக்கத்துல..வெளியூர் போய் தான் படிச்சேன் .. எங்க அப்பா நிலத்தை நல்ல விலைக்கு தான் வித்து படிக்க வச்சார்..அந்த மிச்ச காச வச்சு உழைக்காம எங்கப்பனால உக்காந்து சோறு திங்க முடில..மனுஷன் அந்த நினைப்புலயே சீக்கிரம் செத்துட்டாரு...நானும் படிச்சு முடிச்சு பெரிய வேலைக்கு வந்துட்டேன்...இப்போ 10 வருஷம் ஆச்சு...நல்ல சம்பளம் .. ரெண்டு குழந்தைங்க..ஒரு வீடு வாங்கலாம்னு எண்ணம்...
ஊர்ல இருந்து 30km தள்ளி போனா ஒரு Gated community இருக்கு. உள்ளேயே குழந்தைங்க விளையாட ஒரு சின்ன மைதானம் , நீச்சல் குளம் இருக்கு...வீட்டு பெண்கள் சேர்ந்து பேசி சந்திக்க லேடீஸ் கிளப் இருக்கு.. வீடு முழுக்க ஏசி ... செக்யூரிட்டிக்கு ஒரு 30 பேர் இருக்காங்க .. மளிகை கடைல இருந்து துணி கடை வரைக்கும் வீட்டுக்கு பக்கத்துலயே இருக்கு..
எல்லாம் இருந்தும் கிராமத்துல இருக்குற ஒரு அன்னியோன்யம், அந்த பாசாங்கில்லாத சிரிப்பு, அந்த பேர் தெரியாத தாத்தாவின் கரிசனம், அந்த அடையாளம், அந்த காத்து , அந்த வாசம், அந்த சிரிப்பு, அந்த வாழ்க்கை ?????
கிராமங்களை மீண்டும் எவ்வளவு முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாது என தெரியாமலேயே அழித்து வருகின்றோம் ....

No comments:
Post a Comment