Tuesday, 5 July 2016

நாமே காரணம் !!!

                                                                நாமே காரணம் !!!

அறைக்குள்ள குப்பை போடாத ,
சுவத்துல ஆணி அடிக்காத ,
சொந்தகாரங்க வந்தா வாங்கனு சொல்லு,
பெரியவங்க முன்னாடி கால் மேல கால் போடாத ,
செவ்வாய்க்கிழமை நகம் வெட்டாத  ,
கழிவறை சுத்தமா வச்சுக்கோ ,
மின்சாரத்தை விரயம் பண்ணாத............

வீட்ல ...அதை பண்ணு இதை பண்ணாத , இதை பண்ணு அதை பண்ணாதனு
சொல்லி தர்ற நாம வீட்டுக்கு வெளியே என்ன பண்ணனும், பண்ண கூடாதுனு சொல்லி தர்றதில்ல ..

ஒவ்வொரு கொலை, தற்கொலை, கற்பழிப்புக்கு பின்னும் கதறி அழுவதும், கண்ணீர் விடுவதும், மெழுகுவர்த்தி ஏத்துறதும், அந்த கொலைகாரனை எப்படிலாம் தண்டிக்கணும்னு குரூரமா யோசிக்கறதும் , போலீஸ்காரங்கல திட்டிட்டு ,சட்ட ஒழுங்கு கெட்டு போச்சுனு பேசிட்டு அடுத்த செய்திக்கு காத்துட்டு இருக்கோம். இதுதான் இங்க நடக்குற நிதர்சனம். ஒரு வாட்டியாச்சும் இந்த சம்பவங்களின் பின்புலம் பத்தி யோசிக்க யாரும் தயாரா இல்ல.

120 கோடி மக்கள் இருக்குற நாட்டுல 120 கோடி சிசிடிவி வச்சு எல்லோரையும் பாதுகாக்க முடியாது.சட்டம் ஒழுங்கு, காவல்துறை எல்லாம் நடந்த குற்றங்களுக்கு தண்டனை வழங்க மட்டுமே,குற்றங்கள் நடக்காமல் தடுப்பது நம் அனைவரின் கையில் உள்ளது.இதற்கு தனி மனித ஒழுக்கம் மற்றும் சிந்தனையை மேம்படுத்துவது மட்டுமே வழி. வீட்டிலும் , கல்வி கூடங்களிலும் ஒரு தனி மனிதனின் பொறுப்பு மற்றும் அவனது சிந்தனைகளை சீர் படுத்த வேண்டும்.

தெருவில குப்பை போடாத    ,
சிக்னல் பார்த்து வண்டி ஓட்டு ,
முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு சீட் கொடு ,
நேர்மையா இரு ,லஞ்சம் யாருக்குமே கொடுக்காத,
பொது  இடத்துல புகை பிடிக்காத,
தெரு விளக்கு பகல்ல எரிஞ்சா புகார் கொடு ,
கோயிலோ, ஆலயமோ, சத்தமா பாட்டு வச்சா வாதம் பண்ணு ,
ஜாதியோ, மதமோ அடுத்தவங்ககிட்ட அவசியமில்லாம கேட்கவோ ,சொல்லவோ செய்யாத,
ஒரு விபத்து நடந்தா அங்கிருந்து ஓடாம  உன்னால முடிஞ்ச உதவி செய்  ,
ஒரு அசம்பாவிதம் நடந்தா காவல் துறைக்கு செய்தி கொடு,
அடுத்தவங்க குறையை  சுட்டி காமிச்சு பேசாத ,
ஆணும் பெண்ணும் இரு வேறு பாலினம் மட்டும் தான் ...........

இதெல்லாம் சொல்லி வளர்க்கும் பிள்ளைகளால் மட்டுமே அவர்கள் வாழ்வும் , இந்த நாடும் சீரடையும்.

எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் வன்முறை விடை அல்ல என்பதை ஆழமாக  நம் பிள்ளைகளின்  மனதில் பதிய வைக்க இந்த சமூகமும் சரி , திரைப்படங்களும் சரி , ஏன் , நாமே தவறி விடுகிறோம்.

No comments:

Post a Comment